காற்றை கிழித்து ஊஞ்சலை சிறகாக்கி பறப்பவள்,
மணல் அள்ளி மனை கட்டி யாரோடும் பகிராதவன்,
அந்த மணல் வீட்டின் மேல் குதிப்பதே குறியானவன்,
சின்ன சுட்டியின் கரம்பற்றி குறும்பு கற்றுத் தருபவள்!
மரம் முதல் மேகம் வரை கேள்விகளாய்
துளைப்பவன்,
சறுக்கி, சறுக்கி விழுந்தும் சிரித்து
மகிழ்ந்து எழுபவள்,
மழை ஈரம் உலராத குளிர் காலை வெயிலில்
இதமான தேநீரால் இதழ் நனைத்த படி
இமைகள் விரிய ரசித்து நின்றேன்!
அனைவருக்கும் ஒரே வீட்டுப் பாடம்
அனுப்பும் நான் !
-அனுராதா சாயிநாதன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக