வகுப்பறையில் தனியாய்...
எழுதிவிடவா?
கேட்காத சொல்லெல்லாம்!
ஆசையாசையாய் சேர்த்த சொற்கள்,
அச்சமூட்டும் நாட்களில்,
எழுதினால் தீருமா
சொற்களின் பேரொலி?
சொற்களிட்டு நிறையுமா
மௌனத்தின் பெருவெளி?
ஒவ்வொரு எழுத்தாய் அழியும் பலகையில்
எஞ்சி நிற்கும் ஒரு வினா.
வலியது, சொல்லா, சொல்லின்மையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக