பச்சை வானமெங்கும்
பால்வெள்ளை நட்சத்திரம்!
தேக்கு மரங்களின்
தனியொரு உலகத்தில்!
தேக்கையும் உலுக்கிப் போகிறது,
தென் மேற்கு பருவக் காற்று.
சாலையில் சிந்தின
சின்னச் சின்ன வெள்ளைப் பூக்கள்!
வருணனின் கோட்டையில்,
விழாவென்று முரசொலித்து,
ஆகாய கங்கையின்
மாரிக்கால மடைதிறப்பு!
ஆழியும் வாய் பிளந்து வாங்கிக்கொண்டது!
மலை எல்லாம் அசையாது நனைந்து நின்றது!
கானகம் காலடியில் சேர்த்து வைத்தது!
ஏரிகளும் குளங்களும்
இருந்த இடம் தேடி,
பெருநகர சாலைகளில்
வெள்ளத்தில் மிதக்கின்றன,
தேக்கு மரத்து வெள்ளை பூக்கள்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக