வியாழன், 14 மே, 2020

அன்பிற்கும் உண்டோ....


உன் வார்த்தைகளுக்கான
ஓர்அகராதி செய்ய முயல்கிறேன்.

எந்த மொழி
என்பதற்கே என்னிடம் விடையில்லை.

சூழ்நிலைக்கேற்ப உருமாறும் சொற்களை
எப்படி வகைப்படுத்துவேன்?

என் பெயர் என்ற ஒற்றை பொருள்படும்
உன் ப்ரத்யேக வார்த்தைகளுக்காய்
பல நூறு பத்திகள்,

உன் மௌனத்தின் பொருளுரைக்க
ஒரு பல்கலைகழகத்தில்
நூலகமே செய்யலாம்!

நினைத்ததும் இதழ்களில்
புன்னகை தருவிக்கும்
உன் சொற்களுக்கெல்லாம்
ஒரே பொருள் தான்...

விளக்குவதற்குத்தான்
 என்னிடம் வார்த்தைகள் இல்லை!

அனுராதா சாயிநாதன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக