இளவானின் வண்ணமெல்லாம்
இதழ்களாக்கி பகிர்ந்துகொள்ளும்
அதிகாலை ரோஜாக்கள்!
இரவு உதிர்த்து சென்ற
எரிகல் நட்சத்திரங்கள்
புல் மீது பவள மல்லிகளாய்!
காற்று விரித்த ஆகாய மேடையில்
பறந்தாடும் புள்ளினம் அரங்கேற்றும் புலரிசை
அகமும் முகமும் மின்ன
இன்னும் நூறாண்டு வாழச் சொல்லி
தங்கம் இரைக்கிறது கிழக்கு!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக