கைபிடித்து தந்தையுடன் வீதி
உலா,
கேட்டதெல்லாம் கிடைத்ததில் கொண்டாட்டம்,
காரசாரமாய் அம்மாவோடு அடுக்களை விவாதம்!
கமலோடு
காதல்!
குழந்தை காணவில்லை என
பதற்றம்,
கிழிந்து பறக்கிற தேர்வுத்தாள்!
கல்லூரி நண்பர்களுடன் அரட்டையும் கடலையும்!
குருவியுடன் பறந்தபடி கொஞ்சம் பேச்சு!
கீழே
விழுந்தால் கடலில்
கோவில்!
கண்கள்
மூடிய
கணங்களில்
எனக்கே
எனக்காய் தினமும் திரையாகும்
குட்டி
கதைகள்
என் கனவுகள்!!!
- அனுராதா சாயிநாதன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக