வியாழன், 22 நவம்பர், 2012

பீட்சாவுடன் ஒரு பகல் கனவு


















செம்பருத்தி செண்டுகள் நிறைந்த சோலை,

சின்ன மலைக்குன்றிடை
செக்கச்சிவந்த சூரியன்,

ஆலமரக்கிளை வீடுகளில்
அலுவல்களை கலகலக்கும்
அலகு சிவந்த கிளிகள்,

அம்மரத்தடியில்
அனைவருக்கும் ஒரு வாய் என
அன்னமிடும் ஆச்சியின்
அழகு நெற்றி பொட்டு,

அரைத்து வைத்த மருதாணி
அடுத்த நாள் காலை,

சிக்னலில் சிகப்பு விளக்கு
சாலையோரம் பாஸ்ட்புட்டில் நான்!

- அனுராதா சாயிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக