அடி தனை அரங்கநாதன் தேட,
முடி தனை முகம் நான்கு கொண்டவன் தேட,
விண்ணையும் மண்ணையும் அளந்து
அதன் பின்னையும் பிழம்பாய் வளர்ந்து
தணலுருவாய் நின்ற அருணாச்சலனே
பகலவன் பயந்திடும் அனலுருவே!
தண்ணென வெண்மதி வானில் ஒளிர,
வண்ண கோலம் வாசலில் இட்டு,
சின்னஞ்சிறிய மண்ணகல் வைத்து,
எண்ணெய் ஊற்றி சன்ன திரியிட்டு,
உன்னை சுடரென வணங்கி வேண்டினேன்,
சிறு கொழுந்தென என் மனை புகுந்திடுவாய் போற்றி!
- அனுராதா சாயிநாதன்
- அனுராதா சாயிநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக