வியாழன், 3 ஜனவரி, 2013

சுயநலம் புதை





















உன் பசி, உன் தாகம், உன் உடை 
என்று தான் 
உடன் பிறந்த விலங்கினை, மரங்களை 
அழித்தாய்!
பேராசை கொண்டு பொருள் தேடி, பொருள் தேடி,
பூமித்தாயின் பொன்மேனி துளைத்தாய்,
ஒரு குவளை குளிர்ந்த நீர் நீ பெற்றிட 
உனை குளிரவைக்கும் ஓசோன் வலையினை 
கிழித்தாய்!
நீ செய்த பல சாதனைகள் வழி 
இனியொரு பூமி கிடைக்குமா?
சுயநலத்தை புதைத்து பூமியை சுழலவிடு 
மாக்களுக்காய் மட்டுமல்ல, மரங்களுக்காய் மட்டுமல்ல,
மிருகனே உன் மைந்தர்களுக்காயும்!

 - அனுராதா சாயிநாதன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக