புதன், 1 ஜூன், 2016

புரிதல் அரிது


















புள்ளி இட்டு கோலம் வரைவதொரு காலம்,
பிரபஞ்சத்தை கோலமாய் வரிப்பதொரு காலம்!

கைகூப்பி கற்சிலை முன் நிற்பதொரு பருவம்,
கண்மூடி கடவுளை உணர்வதொரு பருவம்!

பூக்களால் அர்ச்சிக்கும் பூஜை ஒரு விதம்,
பூக்களை அர்ச்சிக்கும் பூஜை ஒரு விதம்!

புள்ளியே உலகமாய்  கண்ட வாழ்க்கையும்,
உலகமே புள்ளியாய் ஓர் அண்ட வாழ்க்கையும்,

மனத்தின் நீள அகலம் விளக்கும் நிலை!
அளக்க முடிந்துவிட்டால் அறிவென்ன கலை?

 - அனுராதா சாயிநாதன் 



2 கருத்துகள்: