இறங்க மனமின்றி
இலையாய் அமர்ந்த
மழைத் திவலை கூட்டம்
கருவேல மரம்!
இலை மேல் இளைப்பாற
இறங்கிய மென்கதிர்கள்
மலர்களாய்,
மஞ்சள் நிறம்!
கண்ணாடி மணிகளென
கோர்த்து நின்ற
கொஞ்ச மழை
ஒளியை அள்ளி வரும்!
இரவின் கருமை கொண்ட
கிளையின்
சிறு கோடுகள்
வானம் ஏந்தும் கணம்,
காணும் மரமெல்லாம்
கற்பகம் தான்
என்று மனம்
கைகள் கூப்பி தொழும்!
- அனுராதா சாயிநாதன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக