வியாழன், 14 ஜூலை, 2016

குதூகலபுரி
















இல்லாத சாலையில் இயங்கும் வாகனத்தில்
ஏழரை மணிக்கே ஏற்றி 
மாநகர்க்கு வெளியே 
தினம் அனுப்புவோம் நம் பிஞ்சுகளை,
மதிப்பெண் நிறைய பெற்றுவா வென! 

தாய் மொழியில் பேசாதே, 
ஓடாதே, குதிக்காதே
என கேட்டு கேட்டு
விளையாட்டு வகுப்பிலும்
வரிசையில் நின்று வீணாகுமோ
ஆசையும் ஆர்வமும்?

லஞ்ச் பாக்ஸ் காலியாக்கி அம்மாவையும்,
வீட்டுப்பாடம் முடித்து ஆசிரியையும்,
புகைப்படத்தில் சிரித்து உலகையும்
மகிழ்விக்கும் முயற்சியில்
மாயமாய் போகிறதோ மழலை? 

முரண்டு பிடித்து, மீறி இழுத்து
குதூகலபுரிக்கு நம்மை வளைத்து
சின்னச்சின்னதாய் மயக்கி சிரித்து
 அநாயாசமாய் அனைத்தையும் 
 வென்று,
 ஆள்கிறதே மழலை! 

- அனுராதா சாயிநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக