சுழித்து சுழித்து ஓர் நீர் கோலம்!
சொரியும் மலர்களாய் தூவானம்!
உயர்ந்து தளும்பும் நீர் நிலையாகி,
நெஞ்சில் நிறைந்து விடும் உயிராகி,
குளிர்ந்து குளிர்ந்து தொடும் காற்றாகி,
நிமிர்ந்து நிமிர்ந்து ஒரு நாற்றாகி,
தட்டில் மணக்கும் சுடு சோறாகி,
தேநீர் குவளை சுவை துளியாகி,
மழைத்து மழைத்து வரும் கார்காலம்
விழுந்து விழுந்து தரும் இறையாகும்!
- அனுராதா சாயிநாதன்
Rain is god..words are too perfect.
பதிலளிநீக்குThanks Priya
நீக்கு