வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

காதல் திசை


















சுதந்திர பறவையாய் சுற்றித்திரிகிறேன்
சிறகடியில் காற்றாய் இசைக்கும் நீ!

காற்றே நானென உலகை நிறைக்கிறேன்
அணைத்துப் பிடிக்கும் புவி விசையாய் நீ!

உயிர்கள் வளர்க்கும் உலகம் நான்,
கதிரெனும் கைகளால்  எனை அசைப்பாய் நீ!

அனைத்து கோள்களொடு அண்டமாய் விரிகிறேன்,
அதனை இயக்கும் பெரும் ஆசையாய் நீ! 

- அனுராதா முரளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக