திங்கள், 5 செப்டம்பர், 2016

ஊர்பக்கம் ஐம்பூதம்














மல்பெரி இலைகளின் பச்சையும், மழை நீரை
உள்வாங்கும் செம்மண்ணுமாய் நிலம்!
மஞ்சள் நிறத்தின் மற்றொரு மணத்தை
மூச்சோடு கலக்கும் செவ்வந்தி காற்று! 
கண்ணில் விழும் வண்ணமெல்லாம்
அலைபேசியில் பதியாதென விரையும்
பறவையை ஒளிக்கும் வானம்!
தாமரைகளை வழிபாட்டுக்கு அனுப்பி
மொட்டும் இலையும் மட்டும் தாங்கி நீர்!

மாரிக்கால பசுங்காட்டில்
பூ மணக்கும் குளிர் காற்றில்,
தண்மை தணலாய், 
தீயும் கண்டேன்,
கானகத்தில் கனல்,
காந்தள் மலர்! 

- அனுராதா சாயிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக