திங்கள், 30 ஜனவரி, 2017

முகில் வீதியில்

















யாளியை போலொரு மேகம்!
கடவுளை தாங்கி!

அண்டத்தை வெண்மையாக்கும்
ஆசையில்  விளையாடும்
ஆகாய குழந்தை ஒரு மேகம்,

மல்லாக்காய் படுத்த
வெண்புலிக்குட்டியாய் மலை மீதொன்று!அழகா?ஆபத்தா?

காய்ந்த நூறு நாக்குகளாய்
குறுத்தை நீட்டும் தென்னைக்கு
பாலூட்ட வந்த கடல்மங்கை போலொன்று!

ஆங்கிலேய தீவின் வடிவில்
 சூழும் மேகம்,
வறட்சியை சூறையாட வந்த ஓர் அயல் முரண்!

நித்தில நீர் மணிகள்
மொத்தமாய் ஈன்றெடுக்க,
அந்தரத்தில் அணைத்தபடி
கனத்த இரு மேகம், மிதக்கும் கருவறையாய்!

 - அனுராதா சாயிநாதன்












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக