வேகவைத்த அரிசியும், அரைத்த தேங்காயும்,
மசித்த பருப்பும், கீரையும், குழம்பும்
அவித்த கடலையும், பொரித்த கூட்டும்,
வறுத்த காயும், சமைத்து,
ருசித்தோம் தினத்தில் மும்முறை!
உழைத்து களைத்து
கதிரறுத்து படைத்த,
வெயில் வருத்தி கருத்த நிறத்தவனை,
கருத்தில் இருத்தாமல்
கதிரவனை பூசித்து
பொங்கலும் புசித்துச் செல்வோம் வெட்கமின்றி!
- அனுராதா சாயிநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக