திங்கள், 26 ஜூன், 2017

இது நலங்கு நேரம்















இது நலங்கு நேரம்!
கதிர் தந்த ஒளி கொண்டு கூத்தாடும் 
செங்குருத்தும்
பச்சை தளிரிலையும்

திருமணத்தை வாழ்த்த வந்து, விருந்துண்டு
கள் அருந்தினவோ பறவைகள்?
நடுவானில் திசை மாறி திரிகின்றன!

மழை தொட துவங்கும் கலவிக்கு முன்
காதல் விளையாட்டு கலகலப்பில் தென்றல்!

மணமகளின் ஒயிலுடுத்தி
காற்றின் வேகத்தில் மோகித்து 
மயில்களாகின மரங்கள்!

இவ்விழாவில் அட்சதையாய் ....
மஞ்சள் அரிசியோ, மலர்களோ
மூழ்கி எடுத்த முத்துக்களோ அல்ல!
அனைத்திற்கும் உயிர்தரும் மழைத்துளிகள்


அனுராதா சாயிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக