மழைக்காலம் வேய்நத வெண்மேக மெத்தையில்☁️☁️☁️
தலைகீழாய் தூங்கும் திவலைக் கூட்டம்!
விழி மூடி உறங்கும் ஒவ்வோர் துளிக்குள்ளும்
ஓராயிரம் கனவுகள் ஒளிந்திருக்கும்!💧💧💧
திசைதேவர் தாலாட்டும் தண்ணென்ற தீண்டுதலால்
திவலைக் கூட்டத்தின் திரிசங்கு துயில் கலையும்!🌬☁️🌬
ஒளிக்கரம் பல நீட்டி ஒரு நெருப்பரசன் வலம் வருவான்,🌞
ஏழு வண்ண வில்லேந்தி இந்திரனும் உடன் வருவான்! 🌈
களிறுகள் ஓடும் காடாகிடும் முகில் நாடு! 🌩🌩🌩
உடல் நடுங்கி நின்றிருக்கும் அந்தரத்தில் நீர் வீடு!
விண் மரங்களின் வெள்ளி வேர்கள் மண் தீண்ட துடித்திருக்கும்! ⚡️⚡️⚡️
ஆயிரம் கோடி கண்சிமிட்டி ஆகாயம் காத்திருக்கும்! ✨✨✨
விழும் கணத்தில் விழி அவிழ
உடல் துறந்து உயிர் கொடுக்கும்
அத்தனை துளிகளும் மொத்தமாய் ஆர்பரிக்கும்,
🌧🌏🌧
இதோ, இது சொர்க்கம்!
- அனுராதா சாயிநாதன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக