கிராமத்து கடவுள்!
வெயில் எனும் பொந்துக்குள், சிக்கிய சருகாய் கிராமம்!
பொந்தின் வாயிலில் புழுதிக் காவல்!
மண் உடுத்தி நின்றன மரக் கிளைகள்!
கிராமத்தில் ஓர் கருஞ்சிறுவன்,
வளைக்குள் சிக்காமல் ஓடியபடி!
“புழுதியில் ஆடாதே!”இழுத்தாள் அம்மா!
“தேர் நகர்ந்தால் ஊர் குளிரும்” எனும் பாட்டன் சொல் கேட்டான்!
நம்பிக்கை நார் கொண்டு
சின்னக் கைகளில் மலர் ஏந்தி
மாலை செய்தான், மாலைகளில்!
நகராமல் அமர்நதவன் தொடுத்த மலர்களை,
அணிந்து நகர்ந்தது தேர்!
இருண்ட வானில் யாரோ கிறுக்கும் ஒலி,
ஊரில் திருவிழாவாம், வெள்ளி
அணிந்தன இலைகள்!
வெயில் பொந்தெல்லாம் வெள்ளம் அடித்து செல்ல,
கடவுள், கடவுளுக்கு நன்றி சொல்லி
வெளியில் ஓடியது
சேற்றில் ஆட!
- அனுராதா சாயிநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக