செவ்வாய், 5 மே, 2015

காதல் cycle





























காதல் cycle!!


மேகமாய் வானில் எங்கோ மறைத்தாலும்

மழையாய் கொட்டி தீர்த்திடும் காதல்!


சிகரங்களின் மேல் உறைய வைத்தாலும்

நதியாய் பாய்ந்து ஓடிடும் காதல்!


குளிர்ந்த ஆவியாய் காற்றில் ஒளித்தாலும்

பனியாய் புல்வெளி எல்லாம் காதல்!


அலையாய் பாதம் தழுவிடும் காதல்

கடலாய் நம்மை விழுங்கிடும் காதல்!


கடலின் ஆழத்தில் கறைத்தபின்னும்

மேலே முகிலாய் மிதந்திடும் காதல்!



- அனுராதா  சாயிநாதன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக