செவ்வாய், 5 மே, 2015

வெள்ளத் திருவிழா

















தூவானமில்லை, துன்புறுத்தல் இல்லாமலில்லை!

தளிரோ, தழையோ, தார் சாலையோ, தமிழனோ,

தலை மீதே 'தொப்' 'தொப்' தாக்குதல்!


இங்கே ஒத்துழயாமையோ 

ஒதுங்கி நிற்றலோ கிடையாது!

குழந்தை உட்பட குடும்பம் குடும்பமாய் வாகனங்களில்!

தேக்கத்தில் சிக்கும் கார்களும் 

விளையாட்டில் பங்கெடுக்க,


நகரா மரங்களைப்போல் 

நகர மக்களும் 

உன் இன்றியமையாமையை உணர்ந்ததில் 

வருடந்தவறாமல் வரும் வெள்ளத்திருவிழா!


-அனுராதா  சாயிநாதன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக