சனி, 30 செப்டம்பர், 2017

பொம்மைகளின் புன்முறுவல்




















கண்கள் இமைக்காது கதைகள் சொல்லும்,

வண்ணங்கள்  பூசிய வடிவான பொம்மைகள்!


மகுடமும், மாலையும், மணிதரித்த இறையும்,

முப்பெருந்தேவியரும், முருகனும், முகுந்தனும்

மானும், மானுடனும், மரமும், மண் சொப்பும்,

படிகளில் ஒயிலாய், அடுக்குகளில் அணியாய்!


அரசன் கதை, அரக்கர் கதை, அரன் கதை, அரங்கன் கதை,

கிராமமும், மலை முகடும்குளம்கிணரும்சிறு நகரும்,

காணகிடைக்கும் விதவிதமாய்!

மனை நிறையும் கதைகதையாய்!


சொற்கள் செலவின்றி  சொல்லும் கதைக்காகவோ,  

மழலையரும், மகளிரும் செப்பும் கதை கேட்கவோ,

அசையாது, ஆண்டாண்டாய் நிற்கும் கதை பகிரவோ,

விளக்கொளியில் விழி மிளிற சிரித்தபடி பொம்மைகள்?



திருநாளும், தின்பண்டமும், தேனான பாடல்களும்,

தெய்வமென திகழும் திருக்கோலமும், தீபங்களும்,

சொல்லாதொரு கதையில், உருதந்த குயவருக்கு

பசியில்லை என்பதாலோ புன்முறுவல் பொம்மைக்கு



- அனுராதா சாயிநாதன்






















2 கருத்துகள்:

  1. Awesome....

    Navaratri Gollu was well portrayed. People still keep lot of dolls in the gollu. But missing the stories, cultural follows up & morals behind it. Nowadays it has become a fashion of keeping goliu and post in FB. Kids also lose interest of going to Gollu. Now I remember the days when I gone to visit Gollu with my mom. She detailed me many stories. Next time, I try to take my daughter and explain it.

    Thank You... Keep Writing. I have gone through all your kavithai... Great.

    பதிலளிநீக்கு