பனிக்கூழின் குளிர் சுவை போல் வயதுருகி இளமையில் நாம்!
தெருக்கடையில் குழந்தையை போல் நெஞ்சம் எம்பி எழுந்திடலாம்!
நட்பென்னும் மின் இயக்கும் தடம் புரளா தொடருந்து நாம்,
இந்த காந்த விசை வலிமையினால் நம் குடும்பங்களும் இணைந்திடலாம்!
நூற்றாண்டில் கால்பங்கு நாம் செய்த ரகளைகள் தாம்,
இனி வரும் காலத்திலும் இந்த அமளி எலாம் தொடர்ந்திடலாம்!
கரம் குலுக்கி நலம் பகிர்ந்தே நிமிடங்கள் மறைந்திடலாம்,
காலக் கல்வெட்டில் இந்நாளை சோழன் உளியால் எழுதிடலாம்!
பாதைகள் பல ஓடி, உலகில் எங்கெங்கோ வசித்திடலாம்,
கிளைகளை போல் படர்ந்தாலும், ஒரு வேராய் வாழ்ந்திடலாம்!
- அனுராதா சாயிநாதன்
Nice...
பதிலளிநீக்குTrue Words... Bloodless Relationship, bonded in everyone's life.