சனி, 30 செப்டம்பர், 2017

நானும் நானும்













நானும் நானும்

எனக்கும் எனக்குமான 
உரையாடலுடனே விடிகிறது நாள்!
எதை விவாதிப்பதென்பதே ஓர் தீரா விவாதம்!

வெறித்த பார்வையும் முனகும் உதடுகளுமென்
அலங்காரமாய்!
ஓடும் நொடிகளோடே ஒரு பந்தயம்!

நகைக்க மறந்து, நல்லிசை மறந்து,

எடை துறக்கும் முயற்சிகள் துறந்து
அந்தி வான் துறந்து, செந்தமிழ் துறந்து,

துறவறச் சாபம் துரத்தும் நாளில்
விடியும் வரமாய் 
சாளரச் சாரல்!
நானும், நானும் மழையோடு மௌனமாய்....




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக