ஞாயிறு, 28 ஜூன், 2020

தண்டனையே விடுதலை 

நேற்றில் நின்று விட்ட நினைவிற்கு
இன்று ஒரு தொலைதூர நாளை!

வினாக்களையும் விடைகளையும்
இணைத்து ஊஞ்சலாடிய வினாடிகளில்
விலகாமல் உரைந்திருந்த என்னை

நான் அரசியாய் அமர்ந்த அவைக்கு
இழுத்து வந்து,
தண்டிப்பதாய் எண்ணி நானே
பரிசளித்தேன்,
இன்றெனும் விடுதலையை!

நேற்று,
இருந்ததற்கான தடமேதுமின்றி
இறந்த காலமானது!

இன்றைய வினாடிகளின் சலனமற்ற ஆட்சியில்,
அரியணையில் யாரென்ற கேள்வி
அர்த்தமற்றது!

 - அனுராதா சாயிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக