ஞாயிறு, 28 ஜூன், 2020

அனுபவச்சான்று














கண்களை சூழும் சுருக்கங்கள் சொல்லும்

சிரித்த நாட்களின் செம்மை!

வருத்தமும் வந்து போன
வாழ்வின் கணங்கள் கண்களின் குழியில்!

பார்வையின் ஆழமும், புன்னகையின் அளவும்
அனுபவச்சான்று!

மின்னும் கண்மணியில் சின்ன விண்மீனாய்
நரைக்காமல் ஒளிரும் நம்பிக்கை!

அனுராதா சாயிநாதன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக