புதிரான வினையான வாழ்வின், அரிதான பொருளாக வரும் விடை நீ!
கண்மணியின் குறுநகையால் இரவை பகலாக்கும் நிலாத் துண்டே!
பாகில்லை! தேனில்லை! உன் பேச்செல்லாம் கற்கண்டே!
கையில் நானேந்த, கண்முன் ஒளிரும் உயிர்த் துகள் நீ!
துறவிக்கு கிட்டாத வரம் நீ! என் வாழ்வில் அழகூட்டி வளரும் மகள் நீ!
- அனுராதா சாயிநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக