செவ்வாய், 10 மே, 2016

நீயன்றி நானெதை பாட



















ஒற்றை காலில் நிற்கவில்லை!
ஆயின் தவம் தான்!

யாகமேதும் வளர்க்கவில்லை!
புகைக்கா அனல் தான்!

உயிர் பலி கொடுக்கவில்லை!
வேண்டுதல் உக்கிரம் தான்!

வான் சிறப்பை வள்ளுவன் பாடி
ஆயின யுகங்கள்,
நானென்ன தனியாய் கூற?
நீயன்றி நானெதை பாட?

தாகித்திருக்கும் எம் கூட்டம்
எல்லாம் உறிந்தெடுக்கும் முன்
காற்றே காட்டை கொளுத்தும் முன்
புல்லும் முள்ளாய் போகும் முன்
தண்ணென வா மழை முகிலே!

தானாய் விழுந்த ஓரிரு விதைகள்
விண்ணை நோக்கி முளைக்கட்டும்!
தாமாய் வாழும் விலங்கும், புள்ளும்,
புழுவும், எறும்பும்,
மண்ணில் இன்னும் இருக்கட்டும்!

- அனுராதா சாயிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக