செவ்வாய், 10 மே, 2016

அத்தனையும் உண்மை

















அத்தனையும் உண்மை!

ஆசை அத்தையை
அழைத்துப்பேசி
அரை ஆண்டுக்கு மேலிருக்கும்!

அடுத்த வீட்டில்
குழந்தை பிறந்து ஆயின வாரங்கள்!
இன்னும் பார்க்கவில்லை!

அப்பா அனுப்பும் ஆன்மீக இதழ்கள்
அட்டை பிரிக்காமல்
அப்படியே அலமாரியில்!

அரிசி டப்பாவின் பின்னால்
அடுக்களையில்
என்ன அடுக்கினேன்
அறியேன்!

பூக்களுக்கு நேரமில்லை
பூஜைக்கு நேரமில்லை
நிலவுக்கு நேரமில்லை
நித்திரைக்கும் நேரமில்லை

எங்கே ஓடுகிறேன்,
எப்பொழுதும் அலைபேசியில்
எதை தேடுகிறேன்?
வாழவே விழைகிறேன்
, ஆனால் ஏனோ
இந்த கவிதையையும்
Whats app பில் ஏற்றுகிறேன்!!!

- அனுராதா சாயிநாதன்
LikeShow more reactions
Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக