
நாளையை நோக்கி நீளும் சாலையோரம்
நேற்றை நினைவூட்டி நிறைந்த மரங்கள்!
நீரூற்றி மரத்தோடே நானும் வளர்ந்தேன்,
நிழலும், நிறமும் நினைவில் குளிர்வாய்,
வீட்டோடு விற்ற குல்மொஹர் மரத்தை
புகைப்படம் எடுக்கும் வசதி இல்லை!
ஊரிலுள்ள மரமெலாம் அலைபேசியுள் பதிக்கிறேன்,
எனக்கென இன்று ஒரு மரம் இல்லை!
மறுபடியும் இறங்கினேன், படம் பிடிக்க அல்ல,
விதை பறிக்க,
சாலை, நாளையை நோக்கி!
- அனுராதா சாயிநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக