புதன், 11 மே, 2016

பள்ளி மைதானம்




























மதியமும் முடியாமல், மாலையும் தொடராமல்,

மத்திய பொன்னேரம்!


மண்ணை மறைத்து வளர்நத

புல்லை மறைத்து

மைதானம் நிறைய மழலை பூக்கள்.


மழை கொட்ட ஏதுவாய் முதிர்ந்த முகில் கூட்டம் மனதை மாற்றி,

தன்னிலை மறந்து, மலைத்து மலைத்து,

மகிழ்ந்து சிரித்து,

முந்தியடித்து,


எதை

பார்க்கின்றனவென

முன்னால் வந்த கதிரவன்

கண்டான்...


புல்வெளி எல்லாம் வானவில்!


- அனுராதா சாயிநாதன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக