தமிழ் கவிதைகள்
ரோஜா மொட்டுக்கள் மூன்றிருந்தன!
எலுமிச்சம் பிஞ்சுகள் ஏராளம்,
முருங்கை காய்கள் முற்றினவோ!!!
சாமந்திக்கு நிதமும் நீர் வேண்டுமே...
உடல் நலம் குன்றி,
கட்டிலில் படுத்த படி
ஊருக்கு செல்ல விழையும்
அம்மாவின் கவலைகள்!
- அனுராதா சாயிநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக