ஞாயிறு, 15 மே, 2016

உறக்கம் இல்லை எனில் படிக்கவும்!
























இரவு ஒரு ஈர்ப்பு!

சொற்ப ஒளி, நிறைய தனிமை!


இரவு இரகசிய  விடுமுறை!

காலை வரை வேலை இல்லை!


இரவில் ஓர் மர்மம்,

உண்மை, பொய் வேறுபாடில்லை!


இரவு உணர்வின் வெளி,

கனவுகள் கருத்தரிக்கும் சோலை!


இரவில் ஒரு அமைதி,

குழப்பம் களைந்த விளக்க நிலை!


விடியும் போது,

வாழ்க்கையை ஒரு படி மேலே வாழ்ந்ததாய்

மனதில் ஒரு நிறைவு!


- அனுராதா சாயிநாதன்


1 கருத்து: