நான்கு நட்சத்திரங்களும்
சில விளக்குகளும்
இருளுக்கு கப்பம் கட்டி வாழ்ந்தன!
பென்னம்பெரிய நிழல்கள் பேய்களாகி,
குட்டி குட்டி பயங்களெல்லாம்
பெட்டி நிறைய பூதங்களாகி,
தீராத இருளோ எனும் பின்னிரவாட்சி!
கைப்பேசியும் மின்விளக்கும்
கைப்பற்றப் பட்ட ஆயுதங்கள்!
இரவும இருட்டும்,
இனம் புரியா பயமும்
எனையும் ஆள
இதோ விடிந்தபின் விடுதலை எக்காளம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக