'தாய்க்கண் பேய்க்கண்' என திட்டும்
அம்மாவை மதியாது, மடியில் அழகாய்
தூங்கும் சிசுவைப் பார்க்கும் அன்னை போல்,
ஆயிரம் பேர் சூழ்ந்த திருமணச் சடங்கில்,
யாரும் கவனியாமல், காதலியின்
கண்கள் சந்திக்கும் காதலன் போல்,
கணுக்கால் தரையில் படாமல் நடந்து,
கண்ணாடி முன் தன் புத்தாடை கண்டு,
குதித்து சிரிக்கும் சிறுமியைப் போல்,
சிறப்பு கட்டணமோ, இலவச வரிசையோ,
சந்நிதானத்தை திரும்பிப் பார்த்த படியே
முன்னால் நடக்கும் பக்தனை போல்,
காற்று வெளி விளையாட்டில்
சேர்ந்து பிரியும் மேகங்கள்
உனை ஒளித்து, ஒளித்து காட்ட
கண்ணிமைக்காமல் பார்க்கிறேன்
கவின் நிலவே!!
- அனுராதா சாயிநாதன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக